யாழில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 27 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 8, 2018

யாழில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 27 பேர் கைது

யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பில் கடந்த சில நாட்களில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 முதல் 25 வயதிற்குட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்டவர்களில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் சிலரும் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த மாணவர்கள் பொலிஸ் பாதுகாப்பில் பரீட்சைக்கு தோற்ற அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பொலிஸாரின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

தொடர் செய்தியினை பார்வையிட
https://www.newsview.lk/2018/08/11-4.html

No comments:

Post a Comment