வடக்கு கிழக்கு மாகாணம் எந்த அடிப்படையிலும் மீண்டும் இணைக்கப்படாமல் முஸ்லிம்களுடைய இன விகிதாசாரம் பேணப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (03.08.2018) ஜும்ஆத்தொழுகயின் பின்னர் பொது மக்களிடம் கையொப்பங்கள் பெறப்பட்டன. தேசிய ஷுஹதாக்கள் நிறுவனத்தினால் இந்தக் கையொப்பங்கள் பெறப்பட்டன.
காத்தான்குடி ஜாமியுழ்ழாபீன் பெரிய மீரா ஜும்ஆப்பள்ளிவாயலிலும் புதிய காத்தான்குடி பதுறியா ஜும்ஆப்பள்ளிவாயலிலும் இந்தக்கையொப்பம் பெறும் நடவடிக்கை இடம் பெற்றது.
28வது தேசிய ஷுஹதாக்கள் தினத்தை முன்னிட்டு பெறப்படும் இந்த கையொப்பங்கள் பிரிக்கப்பட்ட வட கிழக்கு மாகாணம் எந்த அடிப்படையிலும் மீண்டும் இணைக்கப்படாமல் முஸ்லிம்களுடைய இன விகிதாரசாரம் பேணப்படல் வேண்டும்.
நல்லாட்சி அரசினால் தயார் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்ற புதிய அரசியல் தீர்வுத்திட்டத்தில் ஏனைய இனத்திற்கு வழங்கப்படுகின்ற அதே அளவிலான உரிமைகளும் வளப்பங்கீடுகளும் முஸ்லிம்களுக்கு சமமாக வழங்கப்படல் வேண்டும்.
வட கிழக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களில் சிறுபான்மையாக வாழுகின்ற முஸ்லிம்களுக்கு அரசினால் முன்மொழியப்படுகின்ற உரிமைகள் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திகள் தொடர்பான விடயங்களில் முஸ்லிம்களின் விகிதாசாரம் கவனத்திற் கொள்ளப்பட்டு வழங்கப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்திய கோரிக்கை மகஜர் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு தூதுவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதி நிதிகள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக தேசிய ஷுஹதாக்கள் நிறுவனத்தின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி
No comments:
Post a Comment