பொல்கஹவெல புகையிரத விபத்து - சாரதி உள்ளிட்ட நால்வர் பணி நீக்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 8, 2018

பொல்கஹவெல புகையிரத விபத்து - சாரதி உள்ளிட்ட நால்வர் பணி நீக்கம்

நேற்றுமுன்தினம் (06) பொல்கஹவெல, பனலிய பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்து தொடர்பில் நால்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

தரித்து நின்ற புகையிரதத்துடன் மோதிய ரம்புக்கணை புகையிரதத்தின் சாரதி, சாரதி உதவியாளர், காவலர், துணைக் காவலர் ஆகியோரே இவ்வாறு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் (06) பிற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்தின்போது, கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதமானது கோளாறு காரணமாக பொல்கஹவெல புகையிரத நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பிலிருந்து ரம்புக்கணை நோக்கி பயணித்த புகையிரதம் அதன் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விபத்தில் காயமடைந்த 32 பேர், பொல்கஹவெல, குருணாகல், ரம்புக்கணை, கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனுடன் தொடர்பான செய்தியினை பார்வையிட
https://www.newsview.lk/2018/08/blog-post_374.html

No comments:

Post a Comment