ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பஸ் கொள்வனவுத்திட்டத்திற்கு மேலும் ஒரு தொகை நிதியுதவி - News View

About Us

About Us

Breaking

Saturday, August 4, 2018

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பஸ் கொள்வனவுத்திட்டத்திற்கு மேலும் ஒரு தொகை நிதியுதவி

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின், கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்திலுள்ள ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கக்கிளையினர் பிரதேச பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து நன்மைகருதி மேற்கொண்டு வரும் பஸ் கொள்வனவுத்திட்ட நிதி சேகரிப்புக்கு சகோதரர் பவாஸ் 5000 ரூபா நிதியும் சகோதரர் ஜெளபர் அவர்கள் தலைமையில் குவைத் சகோதர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட 23000 ரூபா நிதியும் நோன்பு கால நன்கொடையாக தலைக்கு நூறு என்ற அடிப்படையில் சேகரிக்கப்பட்ட 75283 ரூபாய் நிதியென மொத்தமாக 103000 ரூபாய்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

எமது வேண்டுகோளையேற்று குறித்த பஸ் கொள்வனவுத்திட்டத்திற்கு தனிப்பட்ட ரீதியில் நிதியுதவியளித்த சகோதரர் பவாஸ் அவர்களுக்கும் குவைத் சகோதர்களிடமிருந்து நிதியினை சேகரித்து வழங்கிய சகோதரர் ஜெளபர் அவர்களுக்கும் நோன்பு கால நன்கொடையாக தலைக்கு நூறு என்ற அடிப்படையில் நிதியுதவிய வழங்கிய சகோதரர்கள் அனைவருக்கும் பாடசாலையின் சார்பாகவும் கட்டார் பழைய மாணவர் சங்கக்கிளையினர் சார்பாகவும் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேற்குறித்த தொகையுடன் எமது பஸ் கொள்வனவுத்திட்ட வங்கிக்கணக்கில் இறுதி இருப்பாக 3009992.25 இலங்கை ரூபாய்கள் உள்ளதுடன், பஸ் கொள்வனவுக்காக செலுத்தப்பட்டுள்ள முற்பணம் ஒரு இலட்சம் ரூபாய்களுடன் மொத்தமாக 3109992.25 இலங்கை ரூபாய்கள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளது.

அதே நேரம், இப்பணியை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கொண்டு நிறைவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளதால் பிரதேச, உள்ளூர் தனவந்தர்கள், நலன்விரும்பிகள் தம்மாலான நிதியுதவிகளை வழங்கி எமது பிரதேச பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து தேவையை நிவர்த்தி செய்ய உதவுமாறும் பங்களிப்புகளை வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

பழைய மாணவர் சங்க கட்டார் கிளை
ஓட்டமாவடி தேசிய பாடசாலை

No comments:

Post a Comment