அநுராதபுரம் - பதவிய பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இழக்காகி பாதிக்கப்பட்ட சுமார் 136 பேர் நேற்று (04) மாலை பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதவிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் நேற்று இடம்பெற்ற பூஜை வழிபாட்டின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் 84 பேர் மாணவர்கள் என்பதுடன், 52 பேர் பெற்றோர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்றைய தினம் இடம்பெறுகின்ற தரம் 5 புலமைப் பரீட்சை எழுத இருந்த மாணவர்களே பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு தோற்று முன் ஆசிர்வாதம் பெற்றுக் கொள்வதற்காக பதவிய ஶ்ரீ சுதர்சனாராம விகாரையில் விஷேட பூஜை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
பதவிய, மஹசென் மகா வித்தியாலய மாணவர்களே இவ்வாறு காயமடைந்ததுடன், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் தற்போது வீடு திரும்பியுள்ளனர்.
No comments:
Post a Comment