ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நிதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கு இன்று (31) மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது நீதிபதி கிஹான் குலதுங்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
03 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 2000ம் ஆண்டில் பொரள்ளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்ந்திருந்த நிலையில் சந்தேகநபர் இன்று வழக்கு விசாரணை இடம்பெற்று வந்துள்ளது. அதன்படி சந்தேகநபரை உடனடியாக கைது செய்வதற்கு நீதிபதி கிஹான் குலதுங்க பிடியாணை பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment