பொதுஹெர வட்டார கிளை பிரதேச அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடல் - News View

About Us

About Us

Breaking

Monday, July 2, 2018

பொதுஹெர வட்டார கிளை பிரதேச அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடல்

குருநாகல், பொல்கஹவெல முன்னால் பிரதேச சபை உறுப்பினரும், குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் செயலாளருமான அன்பாஸ் அமால்தீன் மற்றும் பொதுஹெர வட்டார அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் நிஸ்வி மற்று கட்சியின் ஆதரவாளர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை (01) மாவட்டத்தலைவரும், முன்னால் மாகாண சபை உறுப்பினரும் சதொச பிரதித்லைவருமான என்.எம்.நஸீர் (MA) தலைமையில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் மக்கள் காங்கிரஸின் ரிதீகம பிரதேச சபை உறுப்பினர் அஸ்ஹர், குருநாகல் மாநகர சபை வேட்பாளர் இக்பால் ஷரீப் மற்றும் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, பிரதேசத்தின் அபிவிருத்தி சம்பந்தமாகவும், அத்தியாவசியத் தேவைகள் மற்றும் சுயதொழில் ஏற்படுகள் உட்பட பல்வேறு விடையங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

றிம்சி ஜலீல்

No comments:

Post a Comment