சுழிபுரம் சிறுமியின் ரி-சேர்ட், கிளிப் என்பன மீட்பு - News View

About Us

About Us

Breaking

Monday, July 2, 2018

சுழிபுரம் சிறுமியின் ரி-சேர்ட், கிளிப் என்பன மீட்பு

சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் கொல்லப்பட்ட சிறுமி ரெஜினா ஆடைக்குள் அணிந்திருந்த ரி-சேர்ட், தலையில் அணியும் கிளிப் மற்றும் பூல்பான்ட் என்பன பற்றை ஒன்றுக்குள்ளிருந்து மீட்கப்பட்டன.

இப்பொருட்கள் யாவும் குறித்த மாணவியின் வீட்டில் இருந்து சுமார் 600 மீற்றர் தூரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

கிராம இளைஞர்களால் நேற்று (01) காலை 10.30 மணி தொடக்கம் தேடுதலில் ஈடுபட்டனர். அதற்கமைய 12.00 மணியளவில் மேற்படிப் பொருட்கள் மீட்கப்பட்டதோடு, அவை பெற்றோரால் அடையாளம் காண்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து பொலிஸார் மோப்ப நாயுடன் வந்து தேடுதலில் ஈடுபட்டனர். ஆயினும் சிறுமியின் பாடசாலைச் சீருடை, ரை, சப்பாத்து என்பன மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் 17, 18, 22 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் எதிர்வரும் ஜூலை 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் 25 ஆம் திகதி, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பபட்ட காட்டுப்புலம், சுழிபுரம் பிரதேசத்தில் சிவனேஸ்வரன் ரெஜினா எனும் சிறுமி, அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சிறுமி, பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகியுள்ளாகியுள்ளதாக சான்றுகள் இருந்தமை உடற்கூற்று பரிசோதனையில் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment