நேற்று (01) இரவு குளியாபிட்டி, போஹிங்கமுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் பெண் ஒருவர் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தை அடுத்து, காயமடைந்த நால்வரும் குளியாபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
ஏற்கனவே ஏற்பட்ட சச்சரவின் காரணமாக இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, குறித்த நபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்வது தொடர்பான நடவடிக்கையில் குளியாபிட்டி பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment