அலோசியஸின் சிறைச்சாலை மெத்தையின் அடியில் கைத்தொலைபேசிகள் - மீண்டும் விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 5, 2018

அலோசியஸின் சிறைச்சாலை மெத்தையின் அடியில் கைத்தொலைபேசிகள் - மீண்டும் விளக்கமறியல்

அர்ஜுன் அலோஷியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோர் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை எச் விடுதியிலிருந்து 3 கையடக்க தொலைபேசிகளும் 5 சிம் அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (5) அறிவித்தார்.

சிறைச்சாலை அதிகாரிகள் குழு மேற்கொண்ட தேடுதலின்போது இவை கைப்பற்றப்பட்டதாகவும் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

இதில் ஒரு கையடக்க தொலைபேசி அர்ஜூன் அலோசியஷின் தலையணைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பேர்ப்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோஷியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோரை இம்மாதம் 19 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.

பேர்ப்பச்சுவல் வர்த்தக குழுமத்தின் தலைவர் ஜெவ்ரி ஜோசஃப் அலோஷியஸ் மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் ஆறு பணிப்பாளர்கள் வௌிநாடு செல்வதாயின் நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும் எனவும் நீதவான் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment