சம்மாந்துறையினை அபிவிருத்தியின்பால் இட்டுச் செல்ல கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயிலோடு இணைந்து செயற்படத் தயாராகவுள்ளேன் - மன்சூர் எம் பி - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 3, 2018

சம்மாந்துறையினை அபிவிருத்தியின்பால் இட்டுச் செல்ல கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயிலோடு இணைந்து செயற்படத் தயாராகவுள்ளேன் - மன்சூர் எம் பி

சம்மாந்துறையினை அபிவிருத்தியின்பால் இட்டுச் செல்ல தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றுள்ள கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயிலோடு இணைந்து செயற்படத் தயாராகவுள்ளேன். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சமூக வலுவூட்டல் அமைச்சின் மேற்பார்வை உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

சம்மாந்துறை அல் - அர்சத் மகா வித்தியாலயத்தின் விசேட கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் விசே தேவையுடைய மாணவர்களின் விளையாட்டு கடந்த வியாழக்கிழமை (28) பாடசாலை அதிபர் ஏ.எல்.ஏ.மஜீத் தலைமையில் அல்-அர்சத் மைதானத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே சம்மாந்துறை மண் அபிவிருத்தியில் பின்தங்கியும், பிரதேச மக்களின் தேவைகளும், சவால்களும் அதிகமாக காணப்படுகின்றது. இவைகளை சரிசெய்வதற்காகவும், வேறுபட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைமைகளுக்கு மத்தியில் புரிந்துணர்வும், ஒற்றுமையும் அவசியமாகும்.

அந்த வகையில் சம்மாந்துறைக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்துள்ளமை இதுவே முதற்தடவையாகும். அந்த வகையில் நானும் கலாநிதி இஸ்மாயில் அவர்களும் வெவ்வேறான கட்சிகளைச் சேர்ந்தவர்களான இருந்தாலும் சம்மாந்துறையின் அபிவிருத்திக்காகவும், மக்களின் தேவைகளுக்காகவும் இணைந்து செயற்படத் தயாராகவுள்ளேன். அதற்கான அழைப்பினை அவருக்கு விடுத்துள்ளேன் அதனையும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

எனவே, சம்மாந்துறை மக்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க வேண்டும், சம்மாந்துறையின் அனைத்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களிலும் நாங்கள் இருவரும் இணைந்து பயணிக்க வேண்டும். அதற்காக இணைந்து செயற்பட எப்போதும் தயாராகவுள்ளேன். என்றார்.

எம்.சி. அன்சார்

No comments:

Post a Comment