சிறுவர்களுக்கு எதிரான வன்புணர்வு, படுகொலை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக் கோரி கவன ஈர்ப்பு போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Monday, July 2, 2018

சிறுவர்களுக்கு எதிரான வன்புணர்வு, படுகொலை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக் கோரி கவன ஈர்ப்பு போராட்டம்

அண்மைக் காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் தெடர்ச்சியாக நடைபெற்றுவரும் சிறுவர்களுக்கு எதிரான வன்புணர்வு மற்றும் படுகொலைச் சம்பவங்களை கண்டித்து குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு நகரில் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்தரம் கற்கும் மாணவர்கள் மற்றும் முற்போக்கு இளைஞர் அமைப்பு என்பன இணைந்து (01) ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பாடு செய்த பேரணியில் அரசியல் பிரமுகர்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் சுழிபுரம் பாடசாலை மாணவி றெஜினா வன்புணர்வுக்குட்படுத்தபட்டு படுகொலைசெய்யப்பட்டுள்ளமை கிழக்கு மாகாணத்தில் சிறுமிகள் வன்புணர்வுக்குட்பட்மை தொடர்பான குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு அதிகபட்ச தண்டனை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
மட்டக்களப்பு பயனியர் வீதியில் ஆரம்பமான பேரணி அரசடி சந்தி வரை சென்று வீதியோரமாக நின்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டனவர்கள் காவல்துறையினரே கடமையில் ஈடுபடுங்கள், வேண்டும் வேண்டும் றெஜினாவுக்கு நீதி வேண்டும், அன்று வித்தியா சேயா இன்று றெஜினா நாளை?, நல்லாட்சி அரசே றெஜினாவின் படுகொலைக்கு நீதி வழங்கு, அரசே சிறுவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா, றெஜினாவின் படுகொலைக்கு தண்டனை வழங்கு, றெஜினாவின் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறோம், நல்லாட்சி அரசில் காவல்துறை தூங்குகின்றதா? போன்ற வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளை ஏந்தியவண்ணம் கோஷங்களையெழுப்பினர்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

No comments:

Post a Comment