வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை மார்க்கட் வீதியில் பாடசாலை மாணவன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மாணவனின் கால் உடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று நேற்று (2) இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்து தொடர்பில் தெரியவருவதாவது, மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலயத்தில் எட்டாம் வகுப்பில் கல்வி கற்றுவரும் ஈசா லெவ்வை ஹாஜிம் எனும் மாணவன் பாடசாலை முடிந்து வீடு செல்லும் சந்தர்ப்பத்தில் வீதியைக் குறுக்கறுக்கும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் பலத்த காயமடைந்த மாணவன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment