மட்டு மாவட்ட விளையாட்டு விழாவில் காத்தான்குடிக்கு ஒரு தங்கப்பதக்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 3, 2018

மட்டு மாவட்ட விளையாட்டு விழாவில் காத்தான்குடிக்கு ஒரு தங்கப்பதக்கம்

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு விழா 2018ம் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலான விளையாட்டு விழா மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் ((01.07.2018) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து இந்த விளையாட்டு விழாவை நடாத்தியது. இந்த விளையாட்டு விழாவில் காத்தான்குடிக்கு ஒரு தங்கப்பதக்கம் கிடைத்தது.

கை பந்தாட்ட போட்டியிலேயே இந்த தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. இந்த விளையாட்டு விழாவில் காத்தான்குடி பிரதேச செயலக உதை பந்தாட்ட அணிக்கும் வவுணதீவு உதை பந்தாட்ட அணிக்கு மிடையில் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் காத்தான்குடி ப உதை பந்தாட்ட அணி தோல்வியடைந்தது.

மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்கள் கலந்து கொண்ட இந்த விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலப் பிரிவு 45 தங்கப்பதக்கங்களையும் 38 வெள்ளிப்பதக்கங்களையும், 35 வெங்களப்பதக்கங்களையும் பெற்று முதலிடத்தையும் செங்கலடி பிரதேச செயலகப்பிரிவு 23 தங்கப்பதக்கங்களையும் 11 வெள்ளிப்பதக்கங்களையும், 13 வெங்களப்பதக்கங்களையும் பெற்று இரண்டாமிடத்தினையும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப்பிரிவு 14 தங்கப்பதக்கங்களையும் 11 வெள்ளிப்பதக்கங்களையும், 11 வெங்களப்பதக்கங்களையும் பெற்று மூன்றாமிடத்தையும் வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவு 13 தங்கப்பதக்கங்களையும் 12 வெள்ளிப்பதக்கங்களையும், 01 வெங்களப்பதக்கங்களையும் பெற்று நான்காமிடத்தையும் பெற்றுக் கொண்டது.

இந்த விளையாட்டு விழாவில் ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவு ஐந்து தக்கப்பதக்கங்களை பெற்று ஐந்தாமிடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment