ஸ்ரீலங்கன் விமான சேவையில் மற்றுமொரு புதிய விமானம் ஒன்று நேற்று இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை பிரிவில் நடைபெற்ற சர்வ மத நிகழ்வுகளுக்கு பின்னர் இந்த விமானம் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டது.
இந்த விமானம் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட எ 321 ரக விமானமாகும். குறைந்த எரிபொருளுடன் செயற்படக்கூடியதுடன் காற்று தொடர்பில் சிறப்பாக செயற்பட கூடிய தொழிநுட்ப வசதியை இது கொண்டுள்ளது. இதன் நீளம் 146 அடி, உயரம் 37.7 அடி இதன் இறக்கைகள் 117.5 அடியையும் கொண்டுள்ளது.
இந்த விமானத்தில் வர்த்தக வகுப்பில் 12 பேர் பயணிக்க முடியும். 126 பயணிகள் பயணிக்க முடியும் அத்தோடு 6 பேரை கொண்ட பணியாளர்களுடன் இது பயணிக்க கூடியது.
இந்த விமானத்தை ஜெர்மனியில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு முன்னர் இலங்கை விமானிகள் மற்றும் பொறியியலார்கள் சிலர் அங்கு சென்று விமானத்தை பரிசோதித்தனர். அதனை தொடர்ந்து கடந்த 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த விமானம் கட்டுநாயக்கவுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த விமானம், சுமார் 3 மணித்தியாலங்களில் சீனா, டுபாய் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment