பிரதி அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளில் கல்முனை பொதுச் சந்தை அபிவிருத்திக்கு முதல் கட்டமாக 50 மில்லியன் ரூபா. - News View

About Us

About Us

Breaking

Monday, July 2, 2018

பிரதி அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளில் கல்முனை பொதுச் சந்தை அபிவிருத்திக்கு முதல் கட்டமாக 50 மில்லியன் ரூபா.

அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான சட்டமுதுமாணி ரவூப் ஹக்கீம் தலைமையில் கல்முனை பொதுச் சந்தை மற்றும் கல்முனை மாநகர பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான துறைசார் நிபுணர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று (2) திங்கட்கிழமை நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.
இவ்வாலோசனைக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஏ.சி.எம். நபீல், கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம். றகீப், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே. லியாகத் அலி, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் உயர் அதிகாரிகள், கட்டடத் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கல்முனை பொதுச் சந்தை அபிவிருத்திப் பணிக்காக முதற்கட்டமாக 50 மில்லியன் ரூபா நிதியினை நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு இதன்போது ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் குறித்த அபிவிருத்திப் பணியினை முன்னெடுப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

கல்முனை பொதுச் சந்தையினை அபிவிருத்தி செய்வதற்கு தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதியினை பெறுவதற்கான ஆவணங்களை குறித்த திணைக்களத்திற்கு சமர்பிக்குமாறு கட்டடத் திணைக்களத்திற்கு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு பணிப்புரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஊடகப் பிரிவு

No comments:

Post a Comment