இலங்கை ஆசிரியர் சங்கம் 4ஆம் திகதி நாடுதழுவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பில் - News View

About Us

About Us

Breaking

Monday, July 2, 2018

இலங்கை ஆசிரியர் சங்கம் 4ஆம் திகதி நாடுதழுவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பில்

எதிர்வரும் 4ம் திகதி 16 தொழிற்சங்கங்கள் இணைந்து மேற்கொள்ளவுள்ள பணிப்பகிஸ்கரிப்பு வடக்கிலும் இடம்பெறுள்ளது.

இலங்கை கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல் நியமனம் எனும் போர்வையில் தகுதியற்றவர்கள் 1000 இற்கும் அதிகமானவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. 

பிரமாணக்குறிப்புகளை மீறி வழங்கப்படும் இந்த அரசியல் ரீதியான நியமனங்கள் கல்வித்துறையை சீரழிக்கும் செயற்பாடாகும். இத்தகைய நியமனங்களை எதிர்த்து இலங்கை கல்வி நிர்வாக சேவை சங்கம், அதிபர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் என 16 தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்வரும் 4 ஆம் திகதி புதன்கிழமை நாடுதழுவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார். 

இப்பகிஸ்கரிப்பு வட மாகாணத்திலும் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மத்திய கல்வியமைச்சின் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளது.

மேலும், எதிர்வரும் 4 ஆம் திகதி புதன்கிழமை அதிபர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் அனைவரும் சுகயீன விடுமுறை மூலம் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டு கல்வித்துறையில் ஏற்படவுள்ள ஆபத்தைத் தவிர்க்க சமூகப்பொறுப்புடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்தகைய முறையற்ற நியமனங்கள் எதிர்கால சமூகத்துக்கு ஆபத்தானவை என்பதை உணர்ந்து அன்றைய நாளில் பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பாது மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பெற்றோர்கள் மேற்கொண்டு ஒத்துழைக்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அழைப்புவிடுத்துள்ளார்.

No comments:

Post a Comment