பெரஹராவில் யானைகள் குழப்பமடைந்ததில் 31 பேர் வைத்தியசாலையில் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 1, 2018

பெரஹராவில் யானைகள் குழப்பமடைந்ததில் 31 பேர் வைத்தியசாலையில்

கஹவத்த பகுதியில் இடம்பெற்ற மிஹிது பெரஹராவின் போது யானைக் குட்டிகள் இரண்டு குழப்பமடைந்ததில் 31 பேர் காயமடைந்துள்ளனர். 

நேற்று (01) இந்த பெரஹரா நடைபெற்ற போது இவ்வாறு யானைகள் குழப்பமடைந்துள்ளதுடன் குறித்த இரு யானைகளும் பின்னவல யானைகள் சரணாலயத்தில் இருந்து கொண்டுவரப்பட்டவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சத்தம் மற்றும் அதிக மக்களை கண்டதன் காரணமாக குறித்த இரு யானைகளும் குழப்பமடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் குறித்த யானைகளால் மக்களுக்கு எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை எனவும், மக்கள் அச்சத்தில் அங்குமிங்கும் ஓடியதிலேயே காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

காயமடைந்தவர்களில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரும் சிறு பிள்ளைகள் இருவரும் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

எவ்வாறயினும் காயமடைந்தவர்கள் கஹவத்த மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் சிறு காயங்களுக்குள்ளான 6 பேர் சிகிச்சைகளை பெற்று வைத்தியசாலையில் இருந்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment