கிளிநொச்சியில் புதையல் தேடும் கருவி மீட்பு - News View

About Us

About Us

Breaking

Monday, July 2, 2018

கிளிநொச்சியில் புதையல் தேடும் கருவி மீட்பு

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் தனியார் வீடு ஒன்றில் புதையல் தேடும் கருவி ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேகநபர்கள் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களில் இருவர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் கிளிநொச்சி, பளை பகுதியையும் மற்றைய இரண்டு பேரும் கிளிநொச்சி, பரந்தன் பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

வடக்கில் பல லட்சம் பெறுமதியான கருவிகளுடன் புதையல் தோண்டுவதற்கு முயற்சிக்கும் நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில் பெறுமதிமிக்க கருவிகளை யார் வழங்குகிறார்கள், இதற்கு யார் பின்னணியில் இருக்கிறார்கள் என்று மக்களுக்கு சந்தேகம் எழுகின்றது. 

இதுவரை கிளிநொச்சியில் மட்டும் 3 புதையல் தேடும் கருவிகள் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

No comments:

Post a Comment