சாரதிகளின் கவனயீனத்தால் பேருந்து விபத்து - 26 பேர் வைத்தியசாலையில், இருவர் கவலைக்கிடம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 31, 2018

சாரதிகளின் கவனயீனத்தால் பேருந்து விபத்து - 26 பேர் வைத்தியசாலையில், இருவர் கவலைக்கிடம்

கண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் மடவளை பகுதியில் இன்று (31) இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 26 பேர் காயமடைந்துள்ளனர். 

தலவாக்கலையில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் முருதொலவ பகுதியில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமாக பேருந்து ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது. 

விபத்தில் காயமடைந்தவர்கள் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் 4 பாடசாலை மாணவர்கள் மற்றும் இரண்டு பிக்குகள் உட்பட 26 பேர் காயமடைந்துள்ளனர். 
விபத்தில் பலத்த காயமடைந்த பேருந்து ஓட்டுனர்கள் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவக்கின்றது. 

வாகன ஓட்டுனர்களின் கவனயீனம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஹவெல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment