கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் வருடாந்த இப்தார் நிகழ்வு 01.06.2018 வெள்ளிக்கிழமை அமைப்பின் கல்முனைக் காரியாலயத்தில் விமர்சையாக இடம்பெற்றது.
அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி எம். எச். ரஸ்பின் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற மேற்படி நிகழ்வில் மனிதவள அமைப்பின் செயலாளர் எஸ்.எல்.இப்ராஹிம் உட்பட அமைப்பின் நிருவாக குழு அங்கத்தவர்கள் உட்பட வைத்தியர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அமைப்பின் எதிர்கால செயல்திட்டங்கள் மற்றும் கல்முனைக்கான வளைகுடா அமையம் நடை முறைப்படுத்தும் வறிய மற்றும் தேர்ச்சி மிகு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பிலும் பல்வேறுபட்ட ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன இறுதியாக நலன்புரி செயலாளர் மௌலவி எம். ஐ.எம்.இக்பால் அவர்களின் மார்க்க சொற்பொழிவுடன் இப்தார் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது குறிப்பித்தக்கது.
No comments:
Post a Comment