தோல்வியால் ரசிகர்களின் தனிப்பட்ட தாக்குதலால் ஈரான் அணியின் முன்னணி வீரர் சர்தான் அஸ்மௌன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
உலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஈரான் அணி ‘பி’ பிரிவில் இடம்பிடித்திருந்தது. முதல் ஆட்டத்தில் மொராக்கோவை 1-0 என வீழ்த்தியத. 2-வது ஆட்டத்தில் ஸ்பெயின் அணியிடம் 0-1 என வீழ்ந்தது. கடைசி லீக் ஆட்டத்தில் 1-1 என போர்த்துக்கல் அணிக்கெதிராக டிரா செய்ததால் 4 புள்ளிகள் பெற்றும் நொக்அவுட சுற்று வாய்ப்பை இழந்தது.
அந்த அணியில் 23 வயதான ஸ்டிரைக்கர் இடம்பிடித்திருந்தார். இவர் உலகக்கிண்ணத்துக்கான தகுதிச்சுற்றின் போது அதிக கோல் அடித்த வீரராவார். ஆனால், உலகக்கிண்ண தொடரில் மூன்று போட்டியிலும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால் ரசிகர்கள் தனிப்பட்ட முறையில் அவரை அவதூறாக திட்டினார்கள்.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத சர்தான் ஈரான் தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment