ரெஜினா போன்ற பெண் குழந்தைகளின் காட்டுமிராண்டித்தனமான கொலைகள் இனியும் நடைபெறாது தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - வட மாகாண ஆளுநர் - News View

About Us

About Us

Breaking

Friday, June 29, 2018

ரெஜினா போன்ற பெண் குழந்தைகளின் காட்டுமிராண்டித்தனமான கொலைகள் இனியும் நடைபெறாது தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - வட மாகாண ஆளுநர்

வேம்படி மகளீர் கல்லூரியின் 180 ஆண்டு நிறைவு விழாவும் பரிசளிப்பு விழா நிகழ்வும் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளது. நேற்று (29) நடைபெற்ற இநத் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்குரே கலந்து கொண்டார்.

பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன சுமாட் வகுப்பறையினை அவர் திறந்து வைத்ததுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தார்.

மருத்துவர்களை, விரிவுரையாளர்களை என பலதரப்பட்டவர்களை உயர் நிலை வகிப்பவர்களை உருவாக்கி பாடசாலை வேம்படி மகளீர் கல்லூரி கொழும்பில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இப்பாடசாலைகளில் படித்த ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள். அது இந்த பாடசாலைக்கு பெருமை சேர்ப்பதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்குரே தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் புங்குடுதீவில் வித்தியா சுழிபுரத்தில் ரெஜினா போன்ற பெண் குழந்தைகளின் காட்டுமிராண்டித்தனமான கொலைகள் இனியும் நடைபெறாது தடுப்பதற்கு அரசியல் தலைமைகள், பொது அமைப்புகள், மதத் தலைவர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் சமூக அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

வீண் உணர்ச்சி பேச்சுக்கள், கிளர்ச்சிகளினால் இவ்வாறான செயல்களை தடுத்து நிறுத்தி விடமுடியாது. இவை ஏன் நடைபெறுகின்றன என்பதன் பின்னணிகளை நன்கு விசாரித்து அறிந்து கொள்வது அவசியமானது. 

இந்த நிகழ்வில் நான் கலந்து கொண்டிருக்கின்றபோதும் முழு நாட்டினையும் சோகத்தில் ஆற்றிய சம்பவம் றெஜினாவின் படுகொலை என நான் நினைக்கின்றேன். 
பெரியவர்களின் சண்டையில் பழியை தீர்த்துக் கொள்வதற்காக ஒன்றும் அறியாத சின்னக்குழந்தை படுகொலை செய்யப்பட்டிருக்கின்றது. இது மிகவும் கொடூரமான சம்பவம். 

இதற்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்குரே சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன், முன்னாள் துணைவேந்தர் பாலசுந்தரம்பிள்ளை, முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கம், விரிவுரையாளர் திருமதி ஸ்ரீரஞ்சினி முரளிதரன், பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment