மண்ணெண்ணெயின் விலையைக் குறைக்க தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Friday, June 8, 2018

மண்ணெண்ணெயின் விலையைக் குறைக்க தீர்மானம்

அதிகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய்யின் விலை 25 ரூபா முதல் 30 ரூபாவால் விலை குறைப்பு செய்யப்படடுள்ளது. இதன்படி மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 70 ரூபா முதல் 80 ரூபாவுக்கு திங்கட்கிழமை முதல் பெற்றுக்கொள்ள முடியுமென கடற்றொழில் நீரியல்வள, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் திலீப் வெதாரச்சி இன்று தெரிவித்தார்.

மீனவர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் அனைவருக்கும் திங்கட்கிழமை முதல் குறைந்த விலையில் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்தார். 

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பையடுத்து நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் கிளம்பின. மீனவர்கள் தமது அன்றாடத் தொழில் பாதிக்கப்படுவதாக பல போராட்டங்களை செய்தனர். இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் நடத்தப்ட்ட பேச்சுவார்த்தையின் பயனாகவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர உட்பட திறைசேரி உயரதிகாரிகளுடன் நடத்தப்பட்ட தொடர் பேச்சு வார்த்தையுின் பயனாக இந்த விலை குறைப்பு செய்யப்ட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கடந்த 48 மணி நேரத்துள் நடத்திய தொடர் பேச்சுவார்த்தையின் பயனாக மண்ணெண்ணெய்கான விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதாரச்சி தெரிவித்தார். 

இதன்படி திங்கட்கிழமை முதல் நாடு முழுவதுமுள்ள சகலரும் குறைந்த விலையில் மண்ணெண்ணெயை பெற்றுக் கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment