பேருவளை கடலில் வீழ்ந்த மீனவரை காணவில்லை - News View

About Us

About Us

Breaking

Friday, June 8, 2018

பேருவளை கடலில் வீழ்ந்த மீனவரை காணவில்லை

பேருவளை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற நபர் ஒருவர் கடலில் வீழ்ந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.

பல நாள் மீன்பிடி படகில் மீன்பிடிக்காக கடந்த வெள்ளிக்கிழமை (01) சென்று நேற்றையதினம் (07) திரும்பிக் கொண்டிருந்த வேளையில், பிற்பகல் 2.45 மணியளவில் பேருவளை துறைமுகத்திற்கு அருகில் வைத்து, குறித்த படகின் மீது பாரிய அலையொன்று அடித்ததை அடுத்து, மீனவர் குழுவில் இருந்த குறித்த நபர் கடலில் வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து, அவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருவளை, பண்டாரவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான பெத்தும் டி சில்வா என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பேருவளை பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் குறித்த நபரை தேடும் நடவடிக்கை மும்முரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment