கல்குடாத் தொகுதி - கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை, கோறளைப்பற்று மத்தி - வழைச்சேனை பிரதேச செயலகம் ஆகிய நிருவாகப் பிரிவில் உள்ளடங்கும் செம்மண்ணோடை கிராமத்திலிருந்து, எண்பதாமாண்டு நடுப்பகுதியில் வாழைச்சேனையை பிறப்பிடமாகவும், மீராவோடையை வசிப்பிடமாகவும் கொண்ட இன்றைய இணக்க சபைத் தலைவர் அல்ஹாஜ் யு.எல்.எம். இல்யாஸ் மௌலவி அவர்களின் பயிற்றுவிப்பில் அட்டாளைச்சேனை ஸர்க்கிய்யா அறபுக் கல்லூரி அதனைத் தொடர்ந்து புத்தளம் புகழ் நிறைந்த காசிமிய்யா அறபுக் கல்லூரியின் மாணவ வெளியீடுதான் அஹமட் லெப்பை பீர் முஹம்மது மௌலவியாவார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலயத்திலும், அல்-மத்ரஸத்துல் ஸக்கிய்யா குர்ஆன் பாடசாலையிலும் தொடர்ந்தார்.
க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சைகளிலும் சித்தியடைந்து கண்டி - பேராதனிய பல்கலைக்கழகத்திற்கு கலைப்பிரிவில் தனது உயர் கல்வியைத் தொடர்ந்து பீ.ஏ.பட்டதாரியாக - கலாசார உத்தியோகத்தராக அரச பணியாற்றுகின்றார். தென் இந்திய காமராஜர் பல்கலைக்கழகத்தில் தனது எம்.ஏ.பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.
துறை சார்ந்த பெரும் உலமாக்களாலும், கல்வியியலாளர்களாலும் பயிற்றுவிக்கப்பட்ட பீர் முஹம்மது மௌலவி அவர்கள் சமூகத்தில் நிறைந்து வழிந்த தீமைகளுக்கெதிராக தனது போராட்டங்களை சரியான இணைப்பாக்கம், தொடர்பாடலுடன் அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி செம்மண்ணோடை, பதுரியா - மாஞ்சோலை, மீராவோடை, ஓட்டமாவடி, மாவடிச்சேனை, காவத்தமுனை, தியாவட்டவான், பிறைந்துரைச்சேனை, வாழைச்சேனை, றிதிதென்ன, ஜயந்தியாய போன்ற இன்னும் பல கிராமங்களில் மக்கள் தெளிவு படுத்தல் நகர்வுகளை எல்லாக் களங்களிலும், தளங்களிலும் ஒழுங்குபடுத்தி விரிவுபடுத்தினார்.
சமூக ,சமய, மூட நம்பிக்கைகள் தகர்த்தெறியப்பட்டன. மக்களின் மூட சாஸ்த்திர சம்பிரதாயங்களில் மூழ்கி உழைத்துக் கொண்டு காலத்தை கழித்தவர்களுக்கு இது பெரும் இடியாக விழுந்தது.
தலைமுறைகள் மாற்றங்கள் இன்று செம்மண்ணோடை குபா ஜும்ஆப் பள்ளிவாயல், மீராவோடை தாருஸ் ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயல், மாஞ்சோலை ஹிழ்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயல், இன்னும் பல பள்ளிவாயல்கள், கல்விக் கூடங்கள்.
ஆரம்ப மத்ரஸாக்கள், நூலகங்கள் உட்பட தாய், தந்தையரை இழந்த அனாதைப் பிள்னைகளைப் பராமரித்து கல்வியலாளர்களாக உருவாக்குவதற்கான பெரும் தளமாக நாவலடி தாறுத் தௌஹீத் அஸ்ஸலபிய்யா கல்விக் கலாபீடம், தியாவட்டவான் தாருஸ் ஸலாம் கலாபீடம், மீராவோடை உம்மு சுலைம் மகளிர் அறபுக் கலாபீடம் என்று நிறுவி இந்த மக்களை பல்துறைகளில் முன்னோக்கி நகர்த்துவதற்கு தனது நண்பர்கள், சகோதரர்களுடன் இணைந்து பாரிய மாற்றத்திற்கான அடித்தளங்களை இட்டுள்ளார்.
அது இன்று பரந்து விரிந்து எல்லாத்துறைகளிலும் செல்வாக்குச் செலுத்துகின்றது. அல்-குர்ஆன் - அல்-ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்ட அனைத்து சகோதரர்களையும் உள்ளடக்கி கல்குடா ஜம்இய்யது தஃவத்தில் இஸ்லாமிய்யா என்ற ஒரு சுயாதீனமான அமைப்பை நிறுவி அதன் பொதுத் தலைவராக இருந்து பணியாற்றுவதோடு பல்முனைகளிலும், பல்துறைகளிலும் தனது நகர்வுகளை எல்லோருடன் இணைந்தும் மேற்கொண்டுவரும் சமகால சிறந்த ஆளுமைகளில் ஒருதர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இவர் கடந்த காலங்களில் ஓட்டமாவடி சிறாஜிய்யா அறபுக் கல்லூரியின் அதிபராக, கல்குடா உலமா சபையின் பொதுச் செயலாளராக, சமூக, சமய நிறுவனங்களிலும் பாங்காற்றியுள்ளார். சமகாலத்திலும் அதன் வகிபங்குகளையும் ஏதோவொரு வகையில் நிறைவேற்றி வருகிறார்.
இவர் வளர்ந்து வரும் உலமாக்களுக்கும், சமூக செயற்பாட்டாளர்களுக்கும் பொதுவாக எல்லோருக்கும் அடிமட்டம் தொடக்கம் மேல் மட்டம் வரை வியாபிப்பதற்கான முன்னுதாரண புருசராவார். விசேடமாக சமகால மீராவோடைப் பிராந்தியம் என்று அழைக்கப்படும் மீராவோடை, பதுரியா - மாஞ்சோலை, செம்மண்ணோடை கிராமங்களின் முதல் நிலை தலைமகனும் வழிகாட்டியுமாவார் என்பது சமகால நகர்வாகும்.
கல்குடாத் தொகுதி முஸ்லிம் சமூகத்தின் இயங்கியலில் தவிர்க்க முடியாத அனைத்து நகர்வுகளுக்குமான இயங்கியலில் தாக்கம் செலுத்துபவரும் என்பதை எல்லோரும் அறிந்து, புரிந்து நகர்வது சாலச் சிறந்தது என்பதுடன் இவரது வரலாறு நீண்டு செல்லும்....
இது ஒரு சிறு குறிப்பு மாத்திரம்தான்
தொடருங்கள்... படரும்...........!
வை.எல்.மன்சூர்

No comments:
Post a Comment