நேர்மையான தலைமைத்துவம் மற்றும் தெளிவான கொள்கை மட்டும் அல்லாமல் நாட்டை பற்றியும் சிந்திக்கும் தலைவர் ஒருவர் நாட்டுக்கு தேவையென ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ்வாறு, நேர்மையான தலைமைத்துவம் இருக்கும் நபருடன் தான் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதாகவும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க எண்ணியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் மக்கள் அதற்கு எவ்வாறான பதிலை வழங்குவார்கள் என ஊடகவியலாளர்கள் இதன் போது கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த அவர், மக்கள் அந்த யோசனையை நிராகரிப்பார்கள் எனக் தெரிவித்துள்ளார்.
வெறுமனே பேசிக்கொண்டிருக்காது கிராமங்களுக்கு சென்று ஐக்கிய தேசியக் கட்சியை வலுப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவில்லை என்றால், கட்சியின் பயணம் கல்லறையில் தான் முடிவுறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment