அடுத்த மாத நடுப்பகுதியில் பாரிய நிதி மோசடி மற்றும் ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான நீதிமன்றம் - News View

About Us

About Us

Breaking

Friday, June 8, 2018

அடுத்த மாத நடுப்பகுதியில் பாரிய நிதி மோசடி மற்றும் ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான நீதிமன்றம்

பாரிய நிதி மோசடி மற்றும் ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட முதலாவது உயர் நீதிமன்றம் அடுத்த மாத நடுப்பகுதியில் தனது பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.

தற்சமயம் மோட்டார் வாகனம் தொடர்பான நீதிமன்ற வளாகத்திலேயே இந்த உயர் நீதிமன்றம் இயங்கவுள்ளது.

பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட இது தொடர்பான திருத்தச் சட்டத்தின் மூலம் மூன்று விசேட உயர் நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன. ஏனைய இரண்டு உயர் நீதிமன்றங்களையும் புதுக்கடை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இதற்காக சட்ட மாஅதிபர் அலுவலகத்திற்கு, 100 சிரேஷ்ட சட்டத்தரணிகள் புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதில் 50 பேரை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் தற்சமயம் கோரப்பட்டுள்ளன.

பாரிய நிதி மோசடி, ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு விசாரணைகளை நடத்தி, தண்டனை வழங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்கிலேயே இந்த உயர் நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன.

No comments:

Post a Comment