மத்துகம - அகலவத்த வீதியின் வேத்தேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்து மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
லொறியொன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி பின்னர் குறித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியொன்றுடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மத்துகம, தியகடுவ பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுனரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் பெண் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்து தொடர்பில் லொறி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment