சட்ட விரோத துப்பாக்கிகள் மூன்றை வைத்திருந்த நபர் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, June 18, 2018

சட்ட விரோத துப்பாக்கிகள் மூன்றை வைத்திருந்த நபர் கைது

மொனராகல, மெதகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ருவல்வெல பிரதேசத்தில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மெதகம பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 51 வயது நிரம்பியவர் எனவும் இவர் ருவல்வெல, மெதகம பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சந்தேக நபர் ஏன் சட்ட விரோத துப்பாக்கி ஒன்றை தன்னிடம் வைத்திருந்தார் என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, பிபிலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (18) ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மெதகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment