முஸ்லிம் ஆளுநர் ஒருவரை நியமிக்குமாறு கோரிஅகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தலைவர் பீ. எம். பாருக் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில்,
இந்நாட்டு முஸ்லிம்கள் இலங்கையின் மேம்பாட்டுக்காக மேலானபங்களிப்பைச் செய்துள்ளார்கள். இந்நிலையில் கடந்த அரசாங்கங்களால் முஸ்லிம் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு வந்துள்ளனர்.
ஆனால் தற்போதைய அரசாங்கம் இந்த வழிமுறையைத் தகர்த்தெறிந்துள்ளது. ஆயினும் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் முஸ்லிம்கள் பாரிய பங்களிப்பைச் செய்துள்ளார்கள் என்பதை ஞாபகமூட்ட விரும்புகின்றோம்.
ஆதலால் எஞ்சிய ஆளுநர் நியமனத்தின் போது முஸ்லிம் ஆளுநர் ஒருவரை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் என்று குறிப் பிட்டுள்ளார்.
Vidivelli
No comments:
Post a Comment