பாகிஸ்தானை விட்டு வெளியேற நவாஸ் ஷெரிப்புக்கு நீதிமன்றம் அனுமதி மறுப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 7, 2018

பாகிஸ்தானை விட்டு வெளியேற நவாஸ் ஷெரிப்புக்கு நீதிமன்றம் அனுமதி மறுப்பு

வெளிநாடு செல்ல அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி மறுத்து இன்று உத்தரவிட்டுள்ளது. 

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வெளிநாடுகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் சொத்துகளை குவித்து வைத்துள்ளது தொடர்பான வழக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் தேசிய பொறுப்புடமை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

நவாஸ் ஷெரிப்பின் மனைவி குல்ஷூம் நவாஷ், புற்று நோயினால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, அவரை சந்தித்து நலம் விசாரிக்க இங்கிலாந்து செல்ல அனுமதி வேண்டும் என ஷெரிப் மற்றும் அவரது மகள் மர்யம் நவாஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், இன்று விசாரனைக்கு வந்த இந்த வழக்கை தேசிய பொறுப்புடமை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், நவாஷ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை அடைந்துள்ள சமயத்தில் நவாஷ் மற்றும் அவரது மகள் நாட்டை விட்டு வெளியே செல்வதை அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment