மக்காவில் அமைந்துள்ள ஹரம் ஷரீப் மேல் மாடியிலிருந்து ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு 9.30 அளவில் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த இடத்தில் வலுவான இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ள போதிலும் அவர் அதனையும் தாண்டி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
தற்கொலை செய்துக்கொண்டவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாடியிலிருந்து கீழே பாய்ந்து படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அவர் பாய்ந்த அந்த காட்சி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.


No comments:
Post a Comment