டிரம்ப் - புதின் வியன்னாவில் சந்தித்துப் பேச திட்டம் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 10, 2018

டிரம்ப் - புதின் வியன்னாவில் சந்தித்துப் பேச திட்டம்

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பும், முக்கிய பேச்சுவார்த்தையும் அவுஸ்திரேலியா தலைநகர் வியன்னாவில் நடைபெறும் என தெரியவந்துள்ளது. 

சிரியா விவகாரத்தால் அமெரிக்கா - ரஷியா இடையே சமீபத்தில் ஏற்பட்ட பூசல், பிரிட்டன் நாட்டில் ரஷிய முன்னாள் உளவாளி மற்றும் அவரது மகளை ரசாயன தாக்குதலால் ரஷியா கொல்ல முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டினால் பூதாகரமாக வெடித்தது. 

இதுதவிர, அமெரிக்கா - ரஷியா இடையிலான மேலும் சில வேறுபாடுகளை களைவதற்காக இருநாட்டு தலைவர்களும் நேருக்குநேர் சந்தித்துப் பேச வேண்டும் என சர்வதேச அரசியில் நோக்கர்கள் கருதுகின்றனர். 

ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு ஒற்றுமையை ஏற்படுத்துவதில் அவுஸ்திரேலியா நாட்டு பிரதமர் செபாஸ்டின் குரூஸ் அதிக அக்கறை காட்டி வருகிறார். 

இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பும், முக்கிய பேச்சுவார்த்தையும் அவுஸ்திரேலியா தலைநகர் வியன்னாவில் நடைபெறும் என ரஷிய அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமிர்ட்டி பெஸ்கோவ் குறிப்பிட்டுள்ளார். 

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் முன்னர் புதின் தொலைபேசியில் பேசியபோது இதுதொடர்பாக தீர்மானிக்கப்பட்டதாகவும், சந்திப்பு நடைபெறும் திகதியை மட்டும் இரு அதிபர்களும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது என சீனாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிமிர்ட்டி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கான திகதியை குறிப்பிட்டால் எனது அலுவல்களை பொறுத்து டிரம்ப்பை சந்தித்துப் பேச நான் தயாராகவே இருக்கிறேன் என சீனாவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புதினும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment