அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேனவுக்கு மீண்டும் விளக்கமறியலில் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 7, 2018

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேனவுக்கு மீண்டும் விளக்கமறியலில்

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் ஜூன் மாதம் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (07) பிறப்பித்துள்ளது. 

மத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment