ஆட்ட நிர்ணயம்: புதிய சட்டமூலம் ஒன்றை தயாரிக்கவுள்ளதாக பைசர் முஸ்தபா தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, June 8, 2018

ஆட்ட நிர்ணயம்: புதிய சட்டமூலம் ஒன்றை தயாரிக்கவுள்ளதாக பைசர் முஸ்தபா தெரிவிப்பு

கிரிக்கெட் ஆட்ட நிர்ணயம் தொடர்பில் புதிய சட்டமூலம் ஒன்றை தயாரிக்கவுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால் தேர்தலை நடத்த முடியாமல் உள்ளதாக பைசர் முஸ்தபா சுட்டிக்காட்டினார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் சபைக்கு தாம் தௌிவுபடுத்தியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

ஆட்ட நிர்ணயம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில், தேவையான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் விசேட பொலிஸ் பிரிவை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த விடயங்கள் தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்றை தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment