மாவனல்லை, கல்கந்த குடி நீர் பிரச்சினைக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் மூலம் தீர்வு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 5, 2018

மாவனல்லை, கல்கந்த குடி நீர் பிரச்சினைக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் மூலம் தீர்வு

மாவனல்லை பிரதேசத்துக்குட்பட்ட கல்கந்த, வல்பொலதெனிய ஆகிய பிரதேசங்களில் மிக நீண்ட காலமாக நிலவி வரும் குடி நீர் பிரச்சினைகளுக்குதீர்வு காணும் நோக்கில் மாவனல்லை பிரதேச சபை உறுப்பினர் கே.எம். அமீன் உள்ளிட்ட பிரதேச முக்கியஸ்தர்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களை நேற்று (5) அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

குறித்த பிரதேசங்களில் சுமார் 350 குடும்பங்கள் வசிப்பதாகவும், மிக நீண்ட காலமாக குழாய் மூலம் நீர் கிடைக்கப்பெறுவதில்லை எனவும் அவர்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். மேலும், குறித்த பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக போதியளவு குடி நீர் கிடைக்காமையினால் கல்கந்த எனும் இடத்தில் நீர் தாங்கி ஒன்றை அமைத்து தருமாறு பிரதேச முக்கியஸ்தர்கள் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனை செவிமடுத்த அமைச்சர், இது தொடர்பாக விரிவாக ஆராய்ந்து அப்பிரதேசத்துக்கு கிராமிய குடி நீர் வழங்கல் திட்டம் ஒன்றை அமைத்து சுத்தமான குடி நீரை வழங்குவதற்கான திட்டம் ஒன்றை மேற்கொள்வது தொடர்பாக பரீசீலித்துப் பார்ப்பதாக தெரிவித்தார்.

மேலும், இந்த குடி நீர் பிரச்சினைக்கு தற்காலிகமாக விரைவில் தீர்வு காண்பதற்காக இந்த வாரம் குறித்த பிரதேசத்துக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயரதிகரிகளை அனுப்பி ஆய்வு செய்வதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும், குறித்த பிரச்சினை தொடர்பாக அமைச்சர் கபீர் ஹாசிம் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment