புத்தளம் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (09) நடைபெற்றது.
நிறைவுபெற்றுள்ள புத்தளம் குடி வழங்கல் திட்டம் மற்றும் சிலாபம் குடி நீர் வழங்கல் திட்டம் ஆகியவற்றை விரைவில் பொது மக்களின் பாவனைக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து இதில் கலந்துரையாடப்பட்டது.
மேலும், புத்தளம் மாவட்டத்தில் புதிதாக வாடிக்கைளார்கள் குடி நீர் இணைப்புக்களை பெறுவதிலுள்ள பிரச்சினைகள் குறித்தும், பின்தங்கிய பிரதேசங்களில் குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (Ro Plants) அமைப்பது தொடர்பாகவும் இங்கு வருகை தந்திருந்நத புத்தள அரசியல் பிரதிநிதிகள் கலந்துரையாடினார்கள்.
வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், புத்தளம் நகர சபை மேயர் கே.ஏ. பாயிஸ், அமைச்சின் செயலாளர் டீ.ஜி.எம்.வீ. அப்புஆரச்சி, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தலைவர் கே.ஏ.அன்சார், பொது முகாமையாளர் தீப்தி சுமண சேகர, உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.



No comments:
Post a Comment