ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோரின் பிணை மனு ஒத்தி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 19, 2018

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோரின் பிணை மனு ஒத்தி வைப்பு

இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோரின் பிணை மனு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

அந்த பிணை மனுவை இம்மாதம் 26ம் திகதி வரையில் ஒத்தி வைப்பதாக பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி சந்தேகநபர்களை அன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

பிணை வழங்குவது சம்பந்தமான தீர்ப்பு தயாரிக்கப்படாமையின் காரணமாகவே மனு ஒத்தி வைக்கப்படுவதாக பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க இன்று (19) தெரிவித்துள்ளார். 

அத்துடன் சந்தேகநபர்களின் குரல் பதிவு தொடர்பில் பரிசீலனை செய்வதற்காக அவர்களை எதிர்வரும் 29ம் திகதி இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜராக உத்தரவிடுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் விடுக்கப்பட்ட கோரிக்கையையும் அன்றைய தினம் பரிசீலிப்பதாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment