அச்சுறுத்தல்களுக்கு அடிபணியப்போவதில்லை: உறுப்பினர்களின் நடவடிக்கை தொடர்பில் ஆளுனருக்கு அறிக்கை -தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி - News View

About Us

About Us

Breaking

Monday, June 18, 2018

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியப்போவதில்லை: உறுப்பினர்களின் நடவடிக்கை தொடர்பில் ஆளுனருக்கு அறிக்கை -தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி

நோன்புப்பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் சிறுவர் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தொடர்பாக பிரதேச சபையின் பிரதித்தவிசாளா் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஒன்பது பேர் ஒப்பமிட்டு தவிசாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பாகவும், இச்சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பாகவும், ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அமீஸ்தீன் (அஸ்மி) அவா்கள் ஊடகங்களுக்கு விடுத்துள்ள மறுப்பறிக்கையிலிருந்து.

“தாம் முறையாகவே தான் இந்த காணிவேல் களியாட்ட நிகழ்வுக்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவித்த அவர், அல் மாஸ் நிறுவனம் களியாட்ட நிகழ்வு நடாத்துவதற்காக அமீா் அலி விளையாட்டு மைதானத்தைக்கோரி பிரதேச சபையின் அனுமதிக்காக கடிதமொன்றினை எமக்கு தந்திருந்தனர்.

இருப்பினும், தாம் கடந்த 31.05.2018ம் திகதியன்று நடைபெற்ற சபையின் இரண்டாவது அமர்வின் போது அனுமதி கோரிய இக்கடிதத்தை சபையில் சமர்ப்பித்திருந்தேன். அதன் பிறகு குறிந்த நிறுவனம் மூன்று கட்ட பேச்சுவார்த்தையை கல்குடா உலமா சபையுடன் மேற்கொண்டதன் பின்னர், உலமா சபை ஆறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க எமக்கு கடிதம் வழங்கிய பின்னர் தான் பிரதேச சபை 13 அம்சங்கள் கொண்ட நிபந்தனையின் உடன்படிக்கையின் அடிப்படையில் உலமா சபையின் வழிகாட்டலில் இதற்கான அனுமதி பிரதேச சபையினால் கடந்த 07.06.2018ம் திகதி அல்-மாஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இக்களியாட்ட நிகழ்வினை முறையாக ஒழுங்குபடுத்தி கலாசார சீர்கேடுகளிலிருந்து பாதுகாப்பதுடன், உலமா சபையும் அதனை மேற்பார்வையிட அங்கு ஒரு கூடாரம் அமைக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை நாம் பணித்திருந்தோம். பொலீசாருடனும் பாதுகாப்பு விடயம் தொடர்பாக தாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்ட அவர்,

சபையின் இன்றைய நிதி நிலவரம் மிக பின்னடைவை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது. இவ்விடயம் சபை உறுப்பினர்களுக்கு நன்கு தெரியும். இதனைக்கருத்திற்கொண்டும் இக்களியாட்ட நிகழ்வினால் சபைக்கு நாளொன்றிற்கு 25 ஆயிரம் ரூபாயும், அங்கு வினியோகிக்கப்படும் டிக்கட்களின் எண்ணிக்கை அடிப்படையில் பத்து வீதம் சபைக்குத் தர வேண்டுமென்ற நிபந்தனை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆயினும், இது தொடர்பாக பல சர்ச்சைகள் உண்மைக்குப் புறம்பாக எழுப்பபட்டு வருகிறது. சமூக ஊடகங்களில் என் மீது பிழையான விமர்சனங்கள் பிரதேச சபையின் உறுப்பினர்களாலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இது என் மீது அரசியலிலுள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியே இவர்களின் குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கின்றேன். இந்நிகழ்ச்சிக்கான அனுமதியை வழங்கக்கூடாதென்று பெருநாள் தினமான 16.06.2018ம் திகதியன்று தான் எனக்கு கடிதம் பிரதேச சபை உறுப்பினர்களினால் வழங்கப்பட்டது.

அனுமதி வழங்கி 16 நாட்கள் இடைவெளி எமக்கு தாராளமாக இருந்தது. ஏன் அதற்கிடையில் இவா்களால் ஒரு கருத்தும் முன்வைக்கப்பட வில்லை. அவா்கள் இது தொடர்பாக என்னிடம் கேட்டிருக்கலாம் என்று குறிப்பிட்ட அவா், எதுவாயினும் நான் எனது பணியினை முறையாக மேற்கொண்டுள்ளேன். இவர்களின் அச்சுறுத்தல்களுக்கும், பயமுறுத்தல்களுக்கும் தாம் அடிபணிந்து செல்லத்தயாரில்லை.

சபையின் வருமானத்தை தடுக்கவும், சபை நிருவாக நடவடிக்கைகளைில் பிழையான விமர்சனங்களை செய்தமை தொடர்பாக தாம் கிழக்கு மாகாண ஆளுனர் அவர்களின் கவனத்திற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கையெடுக்கப் போவதாகக் குறிப்பிட்டார்.

எம்.ரீ.எம்.பாரிஸ்

No comments:

Post a Comment