வலுக்கும் வர்த்தகப் போர் - சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 19, 2018

வலுக்கும் வர்த்தகப் போர் - சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்

சீனப் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்துள்ளதால் இரு நாடுகளுக்கிடையே வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. 

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் சீனப் பொருட்கள் குவிந்ததுடன் விலையும் மலிவாக கிடைப்பதால் அமெரிக்க பொருட்களின் வர்த்தகம் சரிந்தது. இது அமெரிக்க அதிபர் டிரம்பின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே, அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைப்பிடித்து வரும் டிரம்ப், சீனப் பொருட்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் (இந்தியப்பணம்) வரை வரி விதித்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கு சீனா கூடுதல் வரி விதித்தது. ஏற்கனவே இருக்கும் 25 சதவீத வரியுடன் தற்போது கூடுதல் வரியை விதித்ததால் அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்தது.

சீனாவின் இந்த வரிவிதிப்பு வர்த்தக சமநிலையை பாதிப்பதாக அமெரிக்க கூறி வந்த நிலையில், சீனப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.

சீனாவின் ஏற்றுக்கொள்ள முடியாத வரி விதிப்பு காரணமாக, புதிய வரிகளை விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். மேலும் சீன அரசு தனது நியாயமற்ற நடைமுறைகளை மாற்றி, அதன் சந்தைகளை அமெரிக்க பொருட்களுக்கு திறந்து, அமெரிக்காவுடன் சமநிலையான வர்த்தக உறவை ஏற்றுக்கொள்ளும் வகையில், மேலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment