காஸா எல்லைப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனத்தை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலம் நகரை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். அதோடு அங்கு அமெரிக்க தூதரகமும் திறக்கப்பட்டது. இதனால் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சகட்ட மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள தங்களது தாய்மண்னில் உள்ள தங்களுக்கு சொந்தமான வீடுகளில் குடியேற வேண்டும் என்று வலியுறுத்தி காஸா முனையில் தங்கியுள்ள பாலஸ்தீனிய மக்கள் கடந்த சில வாரங்களாக காசா எல்லைப்பகுதியில் வெள்ளிக்கிழமை தோறும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாக்குதலில் உயிரிழந்த சிறுவன்
இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை (29) காசா எல்லையோரத்தில் உள்ள தடுப்பு வேலியின் அருகே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 14 வயது நிறுவன் உட்பட இரண்டு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 415 பேர் காயமடைந்துள்ளதாக காஸா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1947ஆம் ஆண்டிற்கு முந்தைய உலக வரை படத்தில் இஸ்ரேல் என்ற நாடே இடம் பெற்றிருக்கவில்லை. அதன் பின்னர் வெளியிடப்பட்ட உலக வரை படத்தைப் பார்த்தால் இன்றைக்கும் ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கின்ற எல்லைகள் தெரியும். அதற்குள் இருக்கின்ற நாடுதான் இஸ்ரேல்.
ஆனாலும், 1948ம் ஆண்டு முதல் இஸ்ரேல் என்ற நாடு செயல்படத் தொடங்கியது. தேசமில்லாது அலைந்தவர்கள் ஒரு தேசத்தின் வரலாற்றை துப்பாக்கி முனையில் எழுதத் தொடங்கினர்.
No comments:
Post a Comment