காணாமற்போனோர் அலுவலக பிரதிநிதிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் இடையிலான சந்திப்பு முல்லைத்தீவில் இன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வு காணாமற்போனோர் அலுவலகத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமற்போனோர் அலுவலகத்தின் மூலம் எவ்வித தீர்வும் கிட்டப்போவதில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 7 பேரை உள்ளடக்கிய காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment