நாட்டில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை - மீனவர்களுக்கு எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, June 9, 2018

நாட்டில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை - மீனவர்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை வலுவடைந்திருப்பதால் மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரையில் காற்று நாட்டில் வீசக்கூடுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்த காற்று டொனாடோ என்ற காற்றாக இருக்கலாமென தெரிவிக்கப்பட்டபோதிலும், அது தொடர்பாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்ததாக அரச தகவல் திணைக்கள செய்தியில் கூறப்பட்டுள்ளது. 

நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடருமென எதிர்பார்க்கப்படுவமாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

நாடு முழுவதும், குறிப்பாக மேல், தென், மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

காலியிலிருந்து கொழும்பு, புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 - 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக செயல்படுமாறும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment