இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாத்தறை, வெல்லமடம வளாகம் கால வரையறையின்றி மூடப்படுவதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
விஞ்ஞானம், முகாமைத்துவம் மற்றும் நிதி, மீன்பிடி மற்றும் கடல் அறிவியல், தொழில்நுட்பம், கலை உள்ளிட்ட ஐந்து பிரிவுகள் இன்று பிற்பகல் 2.00 மணி முதல் இவ்வாறு மூடப்படுவதாக, ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் காமினி சேனாநாயக்க தெரிவித்தார்.
அதற்கமைய இன்று (08) பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர் பல்கலைக்கழகத்தின் விடுதியிலிருந்து வெளியேறுமாறு, பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாத்தறை, மெதவத்தையில் அமைந்துள்ள, ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம், வைரஸ் காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து நேற்றைய தினம் (07) முதல் கால வரையறையின்றி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வைரஸ் காரணமாக சுமார் நூறு பேர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாகவும் இது தொடர்பில், சுகாதாரப் பிரிவுக்கு அறிவித்துள்ளதாகவும், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் காமினி சேனாநாயக்க தெரிவித்தார்.

No comments:
Post a Comment