வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை கல்வி வலயத்தை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிட்டன் தலைமையில் நடைபெற்றது.
திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இன்று இந்த செயலமர்வ இடம்பெற்றது.
வாக்குரிமை முக்கியத்துவம்மிக்கது. தனி நபர்கள் தமது வாக்குரிமையின் முக்கியத்துவத்தை பெரிதாக பொருட்படுத்துவதில்லை போதிய தெளிவின்மையே இதன் காரணம். 18 வயது பூர்த்தியான சகல இலங்கை பிரஜைகளும் வாக்காளர் பதிவு படிவத்திலே முறையாக பதிவு செய்தல் வேண்டும்.
வாக்குரிமையை விட வாக்காளர் இடாப்பிலே பதிவு செய்வதன் மூலம் ஒரு பிரஜைக்கு பல நன்மைகள் கிடைக்கின்றதாக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜா தெரிவித்தார்.
வாக்காளர் இடாப்பிலே பதிவு செய்வதையோ வாக்களிப்பதோ இலங்கையில் கட்டாயப்படுத்தப்படாமையின் காரணமாக மக்கள் அது தொடர்பில் முக்கியத்துவம் காட்டுவதில்லை.
அபிவிருத்தி அடைந்த நாடுகள் பலவற்றில் வாக்காளர் பதிவு மற்றும் வாக்கு பதிவு செய்தல் கட்டாயப்படுத்தப்பட்டதனால் அங்கு அதன் முக்கியத்துவம் உணரப்படுகின்றது. இலங்கையில் சராசரியாக 65 வீதமான மக்களே வாக்களிக்கின்றனர்.
35 வீதமான மக்கள் தமது வாக்குகளை பிரயோகிக்காமை காரணமாக பொருத்தமற்றவர்கள் அரசியல் அதிகாரத்திற்கு வர சந்தர்ப்பம் ஏற்படுவதாகவும் இதன்போது திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ், திருகோணமலை கல்வி வலய அதிகாரிகள், அதிபர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment