ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், வீடமைப்பு மற்றும் நீர்மாணத்துறை அமைச்சருமான கௌரவ. சஜீத் பிரேமதாச அவர்களின் உதவியுடன்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவில தொகுதி பிரதான அமைப்பாளரும், முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கௌரவ. வைத்தியர் அருண சிறிசேன அவர்கள் ஊடாக.
சேருவில, கந்தளாய், பேறாறு, தம்பலகாமம், சாலியபுர, அக்வப்பர், வானல, சூரியபுர, முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் மக்களும் 200,000 (இரண்டு இலட்சம் ரூபா) வீட்டுக் கடன் பெறுவதற்கான பத்திரம் இன்று (19) டொக்டர் அருண சிறிசேன அவர்களின் இல்லத்தில் வைத்து 300 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
வீட்டுக்கடன் பத்திரம் இதுவரை 1400 குடும்பங்களுக்கு ஏற்கனவே வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர். மானியமாக 500,000 (ஐந்து லட்சம் ரூபா) காசோலை 25 குடும்பங்களுக்கு இச்சந்தர்பத்தில் கையளிக்கப்பட்டன.
இதன்போது கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். இவ்விதவியினை பெற்றுக்கொண்ட பொது மக்கள் டொக்டர் அருண சிறிசேன அவர்களை மனதார வாழ்த்தினர்.






No comments:
Post a Comment