மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பிரதேசத்தில் கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் நேற்று (03) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த பிரதேசத்திலுள்ள வீடுகளை நேற்று இரவு சோதனையிட்ட போது 500 மில்லி கிராம் மற்றும் 1000 மில்லி கிராம் கஞ்சாவை இருவரிடம் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் நீதிமன்றத்தில் இன்று (04) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் 22 மற்றும் 24 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சரவணன் - அம்பாறை
No comments:
Post a Comment