மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தில் இப்தார் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 10, 2018

மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தில் இப்தார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்பு பல்கலைக் கழக பொது முகாமையாளரும், வாகரை பிரதேச சபை உறுப்பினருமான எஸ்.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி கலந்து கொண்டார்.
மேலும் அதிதிகளாக வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தம்மிக்க தயானந்த, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, புணாணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபாலி ஹேரத், புணாணை இராணுவ கட்டளை அதிகாரிகள், பாசிக்குடா சுற்றுலாத்துறை முகாமையாளர் எஸ்.மாஹீர் மற்றும் பிரதேச பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

எஸ்.எம்.எம். முர்ஷித்

No comments:

Post a Comment