அமெரிக்க ராணுவத்தில் விண்வெளி படை - டிரம்ப் அதிரடி உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 19, 2018

அமெரிக்க ராணுவத்தில் விண்வெளி படை - டிரம்ப் அதிரடி உத்தரவு

அமெரிக்க ராணுவத்தில் விண்வெளிப் படையை உருவாக்க பென்டகனுக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். அமெரிக்க ராணுவத்தில் தரைப்படை, விமானப்படை, கடற்படை, கப்பல் படை, கடலோர பாதுகாப்பு என 5 பிரிவுகள் உள்ளன.

இந்த நிலையில் 6-வது படைப் பிரிவாக விண்வெளிப்படை உருவாக்கப்படுகிறது. அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமாக பென்டகனுக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் டிரம்ப் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

‘‘அமெரிக்கா வெறுமனே விண்வெளியில் இருப்பை கொண்டிருப்பது போதுமானதாக இருக்காது. நாம் கண்டிப்பாக விண்வெளியில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.

எனவே 6-வது விண் வெளிப்படையை நாம் உடனடியாக உருவாக்க வேண்டும். அதுகுறித்து ராணுவம் மற்றும் பென்டகனுக்கு நான் உத்தரவிடுகிறேன். நம்மிடம் ஏற்கனவே விமானப்படை உள்ளது. இருந்தாலும் தற்போது விண்வெளிப்படையும் அமைக்கப்படுகிறது. இரண்டும் தனி தனியானது. ஆனால் இரண்டும் சம வலிமைமிக்கது.

விண்வெளிப்படையின் நடவடிக்கை குறித்து தற்போது உடனடியாக அறிவிக்க இயலாது. மேலும் அதை உடனடியாக அமைக்கவும் முடியாது. ஏனெனில் இதற்கு அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும்’’ என்றார்.

மேலும் அவர் கூறும் போது, அமெரிக்கா ஒரு குடியேற்ற முகாமாக இருக்காது. அமெரிக்காவை ஒரு குடியேற்ற முகாமாக மாற்ற நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்’’ என்றார்.

No comments:

Post a Comment